திருமலையில் 2-ம் நாள் பவித்ரோற்சவம் சிறப்பு வழிபாடுகள்

திருமலை: திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் 2-ம் நாள் பவித்ரோற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவ விழா 3 நாட்கள் நடத்தப்படுகிறது. இதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை விழா தொடங்கியது.

2-ம் நாளான நேற்று காலை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் மலையப்பசுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து விலை உயர்ந்த பட்டு நூல்களால் தயாரிக்கப்பட்ட பவித்ர மாலைகள் உற்சவ மூர்த்திகளுக்கும், விமான வெங்கடேஸ்வரருக்கும் அணிவிக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஜீயர்கள், அர்ச்சகர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *