அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
பதினேழாம் பாடல்
அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.
பொருள்
வியப்பூட்டும் அழகிய வடிவம் கொண்டவளும், தம்மைவிடச் சிறந்த அழகுடையவள் என்று தாமரை மலர்கள் போற்றும் அளவிற்கு அவற்றையே வென்றவளுமான கொடி போன்ற உமையவள், தன் துணைவனான ரதியின் நாயகன் காமதேவனைத் தனது நெற்றிக்கண்ணால் எரித்த சிவபெருமானையே வெற்றி கொள்ளும் பொருட்டு, அவருடைய இடப்பாகத்தையே தன்னுடையதாகக் கொண்டாளோ?
