அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
எட்டாம் பாடல்
சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.
பொருள்
என் தந்தையாகிய ஈசனின் துணைவியே! பேரழகு நிறைந்த அன்னையே! அன்புப் பாசத்தால் கட்டுண்ட தளைகளை விரைந்து வந்து அறுத்து அருள்பவளே! சிந்தூரம் போன்ற செந்நிறத் திருமேனியையும், மகிடாசுரனின் தலையின் மீது நிற்கும் அந்தரி வடிவில் நீலநிற மேனியையும் கொண்டவளே! என்றும் அழிவற்ற இளங்கன்னியே! பிரம்மதேவனின் கபாலத்தைத் திருக்கரத்தில் ஏந்தியவளே! அபிராமி அன்னையே! தாமரை மலரைப் போன்ற உன் அழகிய திருவடிகள் எப்போதும் என் உள்ளத்தில் நிலைத்திருக்கின்றன.
