அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.

ஒன்பதாம் பாடல்

பொருள்

அன்னையே! என் தந்தையான சிவபெருமானின் மனதில் எப்போதும் நீங்காமல் நிற்பவளே! அவருடைய திருவிழிகளில் அழகாகக் காட்சி தருபவளே! பொன்மயமான மேருமலையைப் போன்ற அழகிய திருத்தனங்களால், அழுது வந்த சிறுவன் ஞானசம்பந்தருக்குப் பாலூட்டியவளே! அவற்றின் மீது அணிந்துள்ள முத்துமாலையையும், சிவந்த திருக்கரங்களில் ஏந்திய கரும்பு வில்லையும் மலர் அம்புகளையும், மயிலிறகின் அடிப்பகுதியைப் போன்ற அழகிய புன்னகையையும் எனக்குக் காட்டி, உன் முழுமையான தெய்வீகத் திருக்கோலக் காட்சியை அருள்வாயாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *