அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
அறுபத்தெட்டாம் பாடல்
பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்,
ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே.
பொருள்
அபிராமி அன்னையே! நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களிலும், சுவை, ஒளி, ஊறு, நாற்றம், ஓசை போன்ற அனைத்து தன்மைகளிலும் நீயே நிறைந்து விளங்குகிறாய். சிவகாமசுந்தரியாகிய உன் திருவடிகளைப் பற்றிக் கொண்டு வாழும் பாக்கியம் பெற்ற உன் அடியவர்களுக்கு, இந்த உலகில் கிடைக்காத செல்வமோ நன்மையோ எதுவும் இல்லை. உன்னைச் சரணடைந்தவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் நீ அருளுகிறாய்.
