அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
ஐந்தாம் பாடல்
பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே
பொருள்
அடியவர்களாகிய எங்களுக்கு எப்போதும் திருவருள் புரியும் அபிராமி அன்னையின் பொன்னடிகளை நான் வணங்குகிறேன். திரிபுரையை ஒத்த திருநெஞ்சங்களின் பாரத்தால் வாடும் வஞ்சிக் கொடியைப் போன்ற மெல்லிய இடையையும், நீண்ட சடையுடைய சிவபெருமான் அருந்திய நஞ்சைத் தனது கழுத்தில் நிறுத்தி அமுதமாக்கிய அம்பிகையாகவும், அழகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் சுந்தரியாகவும், அந்தரியாகவும் விளங்கும் அபிராமி அன்னையின் திருவடிகள் என் தலையின் மீது என்றும் நிலைத்திருக்கட்டும்.
