அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.

நான்காவது பாடல்

பொருள்

மனிதர்களும் தேவர்களும் மகத்தான முனிவர்களும் வந்து தலைவணங்கி போற்றும் புனிதமான திருவடிகளை உடையவளே! மென்மையும் அழகும் நிறைந்த கோமளவல்லி அன்னையே! கொன்றை மலர் சூடிய சடைமுடியில் குளிர்ச்சியான பிறைச்சந்திரனையும், புனித கங்கையையும், பாம்பையும் அணிந்த தூய்மையான சிவபெருமானும், நீயும் என் உள்ளத்தையும் சிந்தையையும் விட்டு ஒருபோதும் நீங்காமல் என்றும் நிலைத்திருக்க அருள்புரிவாயாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *