அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.


அறுபதாம் பாடல்

பொருள்

பாலை விட இனிமையான சொற்களைப் பேசும் தேவியே! குளிர்ச்சியும் அழகும் நிறைந்த தாமரை போன்ற உன் திருவடிகளைத் தாங்குவதற்காக, திருமாலும் மற்ற தேவர்களும் வணங்கும் வகையில் கொன்றை மலர்களை அணிந்த சிவபெருமானின் சடைமுடியின் மேலிடமும், உன்னைப் போற்றிப் பாடும் நான்கு வேதங்களும் இருக்கும்போது, அவற்றையெல்லாம் விடுத்து, நாயின் தலையைப் போன்ற இழிவான என் தலையை நீ தேர்ந்தெடுத்தது எவ்வளவு பெரிய அருளாகும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *