அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
ஐம்பத்தெட்டாம் பாடல்
அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயத்தும் முலைத்தையல் நல்லாள், தகை சேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்,
சரணாம் புயமும் அல்லாற் கண்டிலேன் ஒருதஞ்சமுமே.
பொருள்
செந்தாமரை மலரிலும், என் மனமாகிய தாமரையிலும் வீற்றிருக்கும் அம்பிகையே! தாமரை அரும்பைப் போன்ற அழகிய மார்பகங்களைக் கொண்ட உன் கருணை நிறைந்த தாமரை போன்ற கண்கள், அழகிய திருமுகம், தாமரை போன்ற திருக்கரங்கள், திருவடிகள் ஆகியவற்றைத் தவிர, என்னைக் காத்து அருள் செய்வதற்கு வேறு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று நான் நம்புகிறேன்.
