அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
நாற்பத்தெட்டாம் பாடல்
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதிந்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ;
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.
பொருள்
ஒளிரும் பிறைச்சந்திரனைத் தன் சடையில் சூடிய, மேருமலையைப் போன்ற வலிமைமிக்க சிவபெருமானுடன் இணைந்திருக்கும் மணம் கமழும் பசுங்கொடி போன்ற அபிராமி அன்னையைத் தங்கள் மனதில் தியானித்து, அதன் மூலம் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு, ஒரு கண நேரமாவது பேரானந்தத்தை அனுபவிப்பவர்கள், மீண்டும் தோல், இரத்தம், எலும்பு, தசை போன்றவற்றால் ஆன இந்த உடலைப் பெறுவதற்காக பிறக்க விரும்புவார்களா? நிச்சயமாக விரும்பமாட்டார்கள்.
