அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
பதின்மூன்றாம் பாடல்
பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!
பொருள்
அனைத்து உலகங்களையும் தன் திருவருளால் படைத்து, காத்து, அழிக்கும் பராசக்தியே! நஞ்சைத் தன் கழுத்தில் தாங்கிய நீலகண்டப் பெருமானுக்கு முன்பே தோன்றியவளே! என்றும் இளமையுடன் விளங்கும் திருமாலின் தங்கையே! பேரருள் மற்றும் பெருந்தவம் கொண்ட அன்னையே! உன்னையே என் ஒரே தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடுகின்ற எனக்கு, உன்னைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் வழிபட முடியுமோ?
