அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
எண்பத்தாறாம் பாடல்
மாலயன் தேட, மறைதேட, வானவர் தேட, நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்தகப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்;
பாலையும் தேனையும், பாகையும் போலும் பணிமொழியே.
பொருள்
பாலும், தேனும், வெல்லப்பாகும் போல இனிமையாகப் பேசும் அபிராமி அன்னையே! திருமால், பிரம்மன், வேதங்கள், தேவர்கள் என அனைவரும் உன்னைத் தேடியும் அவர்களுக்கு எளிதில் காட்சி தராதவளே! எமன் என்னை அழைத்துச் செல்ல மும்முனைச் சூலத்துடன் வரும்போது, நீ உன் திருவடிகளையும் வளையல்கள் அணிந்த அழகிய திருக்கரங்களையும் காட்டியபடி என் முன்னே வந்து காட்சி தந்து, என்னைக் காத்தருள வேண்டும்.
