அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
எண்பத்தேழாம் பாடல்
மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்! விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்
பழிக்கும் படி ஒருபாகம் கொண்டாளும் பராபரையே.
பொருள்
தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்த சிவபெருமானின் தவத்தைக் கலைத்து, அவரது திருமேனியின் இடப்பாகத்தைப் பெற்று அங்கே வீற்றிருந்து அருளாட்சி செய்யும் அபிராமித் தாயே! சொல்லாலும், எண்ணத்தாலும் அறிய முடியாத உன் திருவுருவம், என் கண்களுக்கு மட்டும் தெரியும் வகையிலும், நான் செய்யும் பூஜை போன்ற வழிபாடுகளுக்கு அருள் தரும் வகையிலும் வெளிப்பட்டு காட்சி அளிப்பது எவ்வளவு பெரிய அதிசயம்!
