அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
ஐம்பத்து மூன்றாம் பாடல்
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்,
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்து
கன்னங்கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவமில்லையே.
பொருள்
சிறிய இடையை உடைய தேவியின் சிவப்பு பட்டாடையையும், பெரிய மார்பகங்களையும், அவற்றின் மீது அணிந்திருக்கும் அழகிய முத்துமாலையையும், பிச்சி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கரிய கூந்தலையும், மூன்று திருக்கண்களையும் மனதில் நினைத்து தியானிப்பவர்களுக்கு, இதைவிடச் சிறந்த தவம் வேறு எதுவும் இல்லை.
