அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
இருபத்தொன்றாம் பாடல்
மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச்
சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை
பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!
பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும் பொற்கொடியே.
பொருள்
நித்திய மங்கள வடிவினளான அபிராமி அன்னையே! சிவந்த பொற்கலசங்களைப் போன்ற அழகிய தனங்களைக் கொண்ட மலைமகளே! சங்கு வளைகள் ஒலிக்கும் திருக்கரங்களையும், அனைத்து கலைகளுக்கும் தலைவியாகிய பேரறிவையும் உடையவளே! மயிலின் அழகையும் மென்மையையும் கொண்டவளே! பொங்கி வழியும் கங்கையின் அலைகள் தங்கியிருக்கும் சிவபெருமானின் இடப்பாகத்தைத் தனதாக்கிக் கொண்டவளே! பொன்னிறம் கொண்ட பிங்கலையாகவும், நீலநிறம் கொண்ட காளியாகவும், செந்நிறம் கொண்ட லலிதாம்பிகையாகவும், வெண்ணிறம் கொண்ட வித்யாதேவியாகவும், பசுமை நிறம் கொண்ட உமையம்மையாகவும் விளங்குபவள் நீயே!
