அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.

பத்தொன்பதாம் பாடல்

பொருள்

ஒளிவீசும் நவகோணங்களைத் தம் திருவடிவில் ஏற்று மகிழ்ந்து வீற்றிருக்கும் அபிராமித் தாயே! எளியவனாகிய நானும் தெளிவாகக் காணும் வகையில் நீ வெளிப்படுத்திய உனது தெய்வீகத் திருமேனியைப் புறக்கண்களால் கண்டு மகிழ்ந்தேன்; அகக்கண்களால் உள்ளத்தில் கண்டு பேரின்பம் அடைந்தேன். அந்த ஆனந்தப் பெருவெள்ளத்திற்கு எல்லையே இல்லை. எளியவனான என் உள்ளத்தில் தெளிந்த மெய்ஞ்ஞானம் மலரச் செய்வதற்காக இத்தகைய பேரருளை வழங்கிய உனது திருவுள்ளத்தின் நோக்கம்தான் என்னவோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *