அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
நாற்பத்து நான்காம் பாடல்
தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால்
இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.
பொருள்
எங்களுக்கெல்லாம் தாயாகவும் இறைவியாகவும் விளங்கும் அன்னையே! எங்கள் இறைவனான சிவபெருமானின் துணைவியே! ஒருகாலத்தில் சிவபெருமானுக்கே தாயாக விளங்கியவளும் நீயே. தேவர்களுக்கெல்லாம் தலைவியாக இருக்கும் உயர்ந்த சிறப்பைப் பெற்ற உன்னையே என் தெய்வமாகக் கொண்டுள்ளேன். உன்னைத் தவிர வேறு ஒரு தெய்வம் இருக்கிறது என்று எண்ணி, வீணாக வேறு தெய்வங்களை வணங்கி மனக்கவலை அடைய மாட்டேன்.
