அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.

முப்பத்தாறாம் பாடல்

பொருள்

தாமரை மலரைப் போன்ற அழகிய ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அபிராமித் தாயே! நீயே எல்லா வகையான செல்வங்களுக்கும் உருவமாக இருக்கிறாய். அந்தச் செல்வங்களால் கிடைக்கும் இன்பங்களை அனுபவிக்கச் செய்யும் மாயையாகவும் நீ விளங்குகிறாய். அந்த மாயையின் மயக்கம் நீங்கிய பிறகு கிடைக்கும் தெளிந்த ஞானமும் நீயே.

அடியேனுடைய உள்ளத்தில் இருக்கும் மாயை என்னும் இருளை முழுமையாக நீக்கி, ஞான ஒளியைப் பிரகாசிக்கச் செய்யும் உன்னுடைய திருவருள் எத்தகையது என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லையே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *