அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
இரண்டாம் பாடல்
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி மென் கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே.
பொருள்
எங்களுக்கு உயிர்த்துணையாகவும், நாங்கள் வழிபடும் தெய்வமாகவும், உலக உயிர்கள் அனைத்தையும் ஈன்றெடுத்த தாயாகவும் விளங்குபவள் திரிபுரசுந்தரி. வேதம் எனும் விருட்சத்தின் கிளையாகவும், அதன் உச்சிக் கொழுந்தாகவும், அடியில் ஆழமாகப் பதிந்துள்ள வேராகவும் அவளே திகழ்கிறாள். குளிர்ச்சி தரும் மலரம்புகள், கரும்பு வில், மென்மையான பாசம் மற்றும் அங்குசம் ஆகியவற்றைத் திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் திரிபுரசுந்தரியே பரம்பொருள் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம்.
