அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.

எண்பத்தைந்தாம் பாடல்

பொருள்

அபிராமி அன்னையே! நான் எந்தத் திசையை நோக்கிப் பார்த்தாலும், உன் கைகளில் இருக்கும் பாசக்கயிறும் அங்குசமும், குளிர்ந்த சிறகுகளைக் கொண்ட வண்டுகள் மொய்த்து ரீங்காரமிடும் புதுமலர்களால் ஆன ஐந்து அம்புகளும், கரும்பு வில்லும் என் கண்களுக்குத் தெரிகின்றன. மேலும், என் எல்லாத் துன்பங்களையும் போக்கும் உன் அழகிய திருமேனியும், நுண்ணிய இடையும், குங்குமம் பூசப்பட்ட கொங்கைகளும், அவற்றின் மீது அழகாகத் தவழும் முத்துமாலைகளும் எங்கும் காட்சியளிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *