அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
எழுபத்து நான்காம் பாடல்
நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையப்
பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும், பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.
பொருள்
முக்கண் கொண்ட சிவபெருமானும், வேதங்களும், திருமாலும், பிரம்மதேவனும் போற்றிப் புகழும் அபிராமி அன்னையின் திருவடிகளை எப்போதும் நினைத்து தியானிப்பவர்கள், தேவமாதர்கள் ஆடிப் பாடும் கற்பகச் சோலையையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள பொன்னால் ஆன அழகிய மஞ்சத்தையும் பெரிதாக எண்ணமாட்டார்கள். அவர்களுக்கு அபிராமி அன்னையின் திருவடிகளைச் சிந்திப்பதே எல்லாவற்றிலும் உயர்ந்த இன்பமாக இருக்கும்.
