அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
ஐம்பத்தொன்றாம் பாடல்
அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள்
முரண்அன்றழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே
சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார்
மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.
பொருள்
பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் கட்டப்பட்ட கோட்டைகளையே பெரிய செல்வமாகக் கருதிய மூன்று அசுரர்களின் வலிமையை அழித்த சிவபெருமானும் திருமாலும் கூட, அபிராமி அம்மையின் திருவடிகளைச் சரணடைந்து வணங்குகின்றனர். அத்தகைய பெருமைமிக்க அபிராமி அம்மையின் பக்தர்களுக்கு பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டாலும் எந்தத் துன்பமும் ஒருபோதும் ஏற்படாது.
