ஆடி மாதம் அருள் நிறைந்த மாதமாகும். எப்படிப்பட்ட துன்பம், பிரச்சனை, நோய் என எதுவாக இருந்தாலும் அது தீர வேண்டும் என வேண்டிக் கொண்டு ஆடி மாதத்தில் அம்மனை வேண்டி வழிபட்டால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தில் வரும் எந்த நாளில், எந்த தெய்வத்தை, எப்படி வழிபட்டால், என்னென்ன பிரச்சனைகள் நீங்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த வழிபாட்டினை தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்வதால், பல மடங்கு அதிக பலன் கிடைக்கும்.
ஆடி மாதம் அனைத்து தெய்வங்களுக்கும் உரிய மிகவும் சக்தி வாய்ந்த மாதமாகும். இது தெய்வீக ஆற்றல் அதிகம் நிறைந்த மாதம் என்பதால் இந்த மாதத்தில் என்ன பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வழிபாடு அல்லது பரிகாரம் செய்கிறோமோ அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.ஆடி மாதத்தில் என்ன பிரச்சனை அல்லது வேண்டுதல் நிறைவேறுவதற்கு எந்த நாளில், எந்த தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பிரச்சனைகள் தீர்க்கும் ஆடி மாத வழிபாடுகள் :

  • தானம், தானியம், செல்வம் பெறுக – ஆடிக் கிருத்திகையில் முருகன் கோவில்களில் விரதமிருந்து பால் காவடி எடுத்து வழிபட வேண்டும்.
  • தீராத நோய்கள் தீர – சமயபுரம் மாரியம்மனுக்கு கூழ் படைத்து, 6 தீபம் ஏற்றி, 6 முறை வலம் வந்து வழிபட வேண்டும்.
  • தடைபட்ட திருமணம் கைகூட – ஆடி பூரம் அன்று ஆண்டாள் கோவில்களில் விரதமிருந்து, தாமரை மாலை சாற்றி, 11 சுமங்கிலிகளுக்கு மங்களப் பொருட்கள் தானம் செய்யுங்கள்.
  • எதிரிகள் தொல்லை நீங்க – ஆடி வெள்ளியில் வராஹி அம்மனை வழிபட்டு, அன்னதானம் அல்லது வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வழங்குங்கள்.
  • சாபம், பில்லி, சூனியம் அகல – ஆடி அமாவாசையில் மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு விரதம் இருந்து, தரிசித்து, 8 முறை வலம் வந்து வழிபடுவது சிறப்பு.
  • குழந்தை பாக்கியம் பெற – ஆடிப்பூரம் அன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் – உண்ணாமுலை அம்மனை வழிபட்டு, வளையல் தானம் செய்யலாம்.
  • நிரந்தர வேலை கிடைக்க – ஆடி வெள்ளியில் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியை தரிசித்து, 6 தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
  • தொழில் வளர்ச்சி அடைய – ஆடி வெள்ளியில் திருவாரூர் ராஜ துர்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி, ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
  • திருமண தடை நீங்கி, நல்ல வாழ்க்கை துணை அமைய – ஆடிச்செவ்வாய்யில் பெண்கள் மட்டும் இரவில் கடைபிடிக்கும் ஒளவையார் நோன்பு அல்லது கொழுக்கட்டை நோன்பு கடைத்து, கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு படைத்து வழிபடலாம்.
  • குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் பெருக – ஆடி வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு நெய் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். விளக்கு பூஜை செய்வதும், விளக்கு பூஜையில் கலந்து கொள்வதும் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தையும், செல்வ செழிப்பையும் தரும்.
  • குடும்ப ஒற்றுமை நிலைக்க, வாழ்க்கை சிறக்க – ஆடி வெள்ளியில் அம்மனுக்கு கண்ணாடி வளையல், மஞ்சள், குங்குமம் காணிக்கையாக செலுத்தலாம்.
  • மன அமைதி கிடைக்க, திருஷ்டி விலக – ஆடி வெள்ளி மற்றும் செவ்வாயில் அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி, விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
    குலதெய்வ அருள் கிடைக்க – ஆடி மாதத்தில் மாவிளக்கு போட்டு வழிபட்டால் குலதெய்வத்தின் அருளும், முன்னோர்களின் அருளும் கிடைக்கும்.
    reohase

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *