ஆடி பெளர்ணமி 2026: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல ஏற்ற நேரம், சிறப்புகள் மற்றும் பலன்கள்
திருவண்ணாமலை என்றாலே பக்தர்களின் நினைவுக்கு முதலில் வருவது கிரிவல வழிபாடுதான். பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும், “நினைத்தாலே முக்தி தரும்” புண்ணியத் தலமாகவும் போற்றப்படும் திருவண்ணாமலையில், சிவபெருமானே மலையாக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். எனவே, மலையை வலம் வந்து வழிபடுவது சிவபெருமானையே வலம் வந்து வழிபட்டதற்கு சமமாகக் கருதப்படுகிறது.

வாழ்நாளில் ஒருமுறையாவது திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது பாவங்களை நீக்கி புண்ணிய பலன்களை அளிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக, ஆண்டின் முக்கியமான பௌர்ணமி நாட்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆடி பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து வழிபடுவதால் சிவபெருமானின் அருளுடன் திருமால் மற்றும் அம்பிகையின் அருளையும் பெறலாம் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஏராளமான கோயில்கள், தீர்த்தங்கள், ஜீவ சமாதிகள் மற்றும் சித்தர்கள் தவம் செய்த குகைகள் அமைந்துள்ளன. அவற்றை தரிசித்தபடி கிரிவலம் வருவது ஆன்மிக ரீதியாக மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது எப்போது சிறப்பு?
வருடத்தின் அனைத்து நாட்களிலும், எந்த நேரத்திலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லலாம். இருப்பினும் கிழமை, திதி, நட்சத்திரம், மாதம் மற்றும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து கிரிவலத்தின் சிறப்பும் பலன்களும் மாறுபடும் என்று ஆன்மிக நம்பிக்கைகள் கூறுகின்றன.
இதனால் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர். பௌர்ணமி திதி தொடங்கும் மற்றும் நிறைவடையும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு கிரிவலம் செல்லும் நேரத்தையும் பக்தர்கள் திட்டமிடுகின்றனர்.
ஆடி பௌர்ணமி 2026 கிரிவலம் செல்ல ஏற்ற நேரம்
2026ஆம் ஆண்டு ஆடி பௌர்ணமி திதி ஜூலை 28ஆம் தேதி இரவு 7.33 மணிக்கு தொடங்கி, ஜூலை 29ஆம் தேதி இரவு 8.58 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, பௌர்ணமி இரவில் கிரிவலம் செல்ல விரும்பும் பக்தர்கள் ஜூலை 28ஆம் தேதி இரவு கிரிவலம் மேற்கொள்வதை முக்கியமாகக் கருதலாம்.
| விபரம் | நேரம் |
|---|---|
| ஆடி பௌர்ணமி | ஜூலை 29, புதன்கிழமை |
| பௌர்ணமி திதி தொடக்கம் | ஜூலை 28 இரவு 7.33 மணி |
| பௌர்ணமி திதி நிறைவு | ஜூலை 29 இரவு 8.58 மணி |
| கிரிவலம் தொடங்க ஏற்ற நேரம் | ஜூலை 28 காலை 7.27 மணி |
| கிரிவலம் நிறைவு செய்ய ஏற்ற நேரம் | ஜூலை 29 காலை 8.54 மணி |
ஆடி பௌர்ணமி கிரிவலத்தின் சிறப்புகள்
ஆடி பௌர்ணமி மற்ற பௌர்ணமி நாட்களைப் போல சாதாரணமான வழிபாட்டு நாளாக மட்டும் கருதப்படுவதில்லை. ஹரியும் ஹரனும் ஒன்றே என்பதை உணர்த்தும் வகையில், அம்பிகையின் தவம் நிறைவு பெற்ற நாளாகவும், சிவபெருமான் சங்கரநாராயணர் திருக்கோலத்தில் அருள்பாலித்த நாளாகவும் இந்த நாள் போற்றப்படுகிறது.
அம்பிகையின் தவம் வெற்றி பெற்ற நாளாகக் கருதப்படுவதால், ஆடி பௌர்ணமி அன்று மனதார இறைவனை வழிபட்டு வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த நாளில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து சிவபெருமானை வழிபட்டால் நீண்ட காலமாகத் தொடரும் கர்மவினைகள் மற்றும் பாவங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. சிவ மந்திரங்களை உச்சரித்தபடி, இறை சிந்தனையுடன் கிரிவலம் செல்வது ஆன்மிக ரீதியாக சிறப்பான பலனைத் தரும் எனக் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை கிரிவலம் தரும் பலன்கள்
திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமையில் கிரிவலம் வருவதற்கும் தனிச்சிறப்பு இருப்பதாக ஆன்மிக நம்பிக்கைகள் கூறுகின்றன. கடன் பிரச்சினைகள் குறைந்து, செல்வ வளம் பெருகும் என்றும், நீண்ட நாட்களாக இருந்து வரும் வழக்கு மற்றும் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
மேலும் செவ்வாய்க்கிழமை கிரிவலம் செய்வதால் கர்மவினைகள் நீங்கி முக்தி கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். 2026ஆம் ஆண்டின் ஆடி பௌர்ணமி காலத்தில் பூராடம் மற்றும் உத்திராடம் நட்சத்திரங்களின் சேர்க்கை இருப்பதாகக் கூறப்படுவதால், இந்த நாளில் கிரிவலம் வருவது காரிய வெற்றிக்கும், பித்ரு தோஷ நிவர்த்திக்கும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
