திருப்பதியில் பிரம்மோற்சவம்: 9 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசனங்கள் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவம், இந்த ஆண்டு செப்டம்பர் 15 முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, 9 நாட்கள் நடைபெறும் விழாக்காலத்தில் பல்வேறு ஆர்ஜித சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள ஆர்ஜித சேவைகள்:

  • அஷ்டதள பாத பத்மாராதன சேவை
  • திருப்பாவாடை சேவை
  • ஆர்ஜித கல்யாணோற்சவம்
  • ஊஞ்சல் சேவை
  • சஹஸ்ர தீபாலங்கார சேவை

அதுமட்டுமின்றி, பிரம்மோற்சவ விழா நடைபெறும் நாட்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) மற்றும் நன்கொடையாளர்களுக்கான சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனவே, செப்டம்பர் மாதத்தில் திருப்பதி செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்கள் இந்த மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிடுமாறும், தேவஸ்தானத்தின் ஏற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *