திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் வெகு விமரிசையாக திருக்கல்யாணப் பெருவிழா

சையாக திருக்கல்யாணப் பெரு

திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழா: அதிகார நந்தி வாகனத்தில் அம்பாள் வீதியுலா

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலும், தாழக்கோயில் என அழைக்கப்படும் பக்தவச்சலேஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளன. தாழக்கோயில் வளாகத்தில் தனி சந்நிதியில் திரிபுரசுந்தரி அம்பாள் அருள்பாலித்து வருகிறார்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான விழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகார நந்தி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, திரிபுரசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளச் செய்து வீதியுலா நடைபெற்றது.

கோயிலில் இருந்து புறப்பட்ட அம்பாள், முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று அம்பாளை வழிபட்டனர். விழாவையொட்டி பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையிலான பணியாளர்கள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *